ஞாயிறு, 9 மார்ச், 2014

இரண்டாம் ஜன்னல்மேற்குச் சுவரோரமிருந்து 
கிழக்கிற்கு ஊர்ந்தது
ஜன்னல்வழி நுழைந்து 
வீட்டுத்தரையில் வீழ்ந்த வெயில்
ஊர்ந்து, தேய்ந்து
அதே ஜன்னல்வழி வெளியேறி 
வீதியில் தகித்து நிற்கும்
வெயிலை வீட்டிற்குள் அழைக்க
மேற்கில் ஜன்னலில்லை 
என் வீட்டில்.
13 அக் 2013

கருத்துகள் இல்லை: