வெள்ளி, 6 ஜூலை, 2012

வெறுமைப்பொழுது

மறக்கத்தக்கதாய்
எதுவுமில்லாதபோது
எண்ணையில் மூழ்கப்போகும்
விளக்கின் திரியைத்
தூண்டிவிட்டேன்

மறக்கமுடியாததாக
ஆகியிருந்தது
அவ்விளக்கின் புன்னகை

கருத்துகள் இல்லை: