வெள்ளி, 6 ஜூலை, 2012

வெயில்

தாழ்ப்பாள் நீக்கி
கதவைத் திறந்ததும்
நெடுஞ்சாண்கிடையாக
என் காலில் விழுந்தது
வெயில்

தூக்கி நிறுத்தி
ஆறுதல் சொல்ல முடியாமல்
கதவைச் சாத்தி
தாழிட்டேன்

கருத்துகள் இல்லை: