திங்கள், 2 ஜூலை, 2012

கிறீச்

சின்ன கிறீச்
மறுபடியும் சின்ன கிறீச்

இப்போது பெரிய கிறீச்
ரொம்பப் பெரிய கிறீச்

ஜன்னல் கம்பிகளில்
தலையை மோதிக்கொள்ளும் கதவு

மீண்டும் மீண்டும்
மோதி மண்டையை
உடைத்துக்கொள்கிறது

சிறுமழை
தொடங்கிவிட்டது

ஜன்னலை அடைக்க
யாருமில்லை

வீடு
பூட்டியிருக்கிறது
கருத்துகள் இல்லை: