வெள்ளி, 6 ஜூலை, 2012

பழசு

வெகு நாளுக்குப் பின்
என் வீட்டுக்கு
விருந்தாளியாக வந்தது
எனது பழைய புன்னகை

அதன் பற்கள்
உதிர்ந்துபோயிருந்தன

உதடுகளில் பனிவெடிப்பும்
காயங்களில்
இரத்தப் பிசுபிசுப்பும்

பொலிவிழந்து
தோல்சுருங்கிய முகம்

பார்க்கச் சகிக்காமல்
வீட்டை விட்டு
வெளியேறி விட்டேன் நான்

கருத்துகள் இல்லை: