வியாழன், 5 ஜூலை, 2012

உந்திப் பறக்கும் பார்வை

இலைகள் பூத்துக் குலுங்கும் செடியாக
வீட்டுக்கொல்லையில் அமர்ந்திருந்த என்னைத்
தொட்டுத் தழுவி
இரவின் இருளை
நக்கித் துடைத்து
எனது பச்சையத் தடாகத்தை முன்மொழிகிறான் அதிகாலைச் சூரியன்

உன் கள்ளூறிய விழிகளில்
உறங்கிமுடித்து
விருட்டெனப் பறந்த வெட்டுக்கிளி
என் தடாக நீரை அள்ளிப் பருகுகிறது

தீக்குச்சிகளைக் கொட்டிவிட்டு
தீப்பெட்டியோடு காத்திருக்கிறேன்
உன்னைப் பிடிக்க

உன் ஒற்றை உந்துதலில்
நமுத்துப் போகின்றன
எனது தீக்குச்சிகள்

கருத்துகள் இல்லை: